சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து – ஒருவர் பலியான சோகம்!

Share

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றுவரும் சூழலில், இரண்டு தூண்களை இணைக்கும் பாலம் போன்ற கட்டுமானம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தரவுகள் வெளியாகவில்லை. ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தால் பூந்தமல்லி – மவுன்ட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள் இதே பக்கத்தில் சேர்க்கப்படும்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com