விபத்துக்குள்ளான அந்த விமானம் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. போயிங் 787-8 ரக அந்த விமானத்தில் விமானக் குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருந்தனர்.
அதில் 169 இந்தியர்களும் பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த 7 பேரும் அடக்கம்.
காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
1800 5691 444 மேற்கொண்டு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உதவி எண்.
இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்” எனக் கூறியிருக்கிறது.
விமானத்தில் பயணித்த 230 பயணிகளின் விவரங்களும் வெளியாகியிருக்கிறது.