Virat Kohli – Ravi shastri: விராட் கோலி டெஸ்ட் ஓய்வு; ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி

Share

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விராட் கோலி

விராட் கோலி

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்துப் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, “விராட் கோலி ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

நான் அந்த இடத்திலிருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்.

அவரது ஓய்வு இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவருடன் சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இக்கருத்து பி.சி.சி.ஐ-யை மறைமுகமாகச் சாடுவதாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com