கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையாக தொடங்கி காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை

Share

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி
படக்குறிப்பு, மசவரம்பு ஓடை

கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைத்துளியாய் விழுந்து அருவிகளாக வந்து பின்னர் ஓடைகளாக பயணிக்கிறது நொய்யல் நதி. நொய்யலுக்கு ஆதாரமாக விளங்கும் அத்தகைய நீர் வீழ்ச்சிகளில் முதன்மையானது கோவைக்குற்றாலம் நீர் வீழ்ச்சி. கோவை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி
படக்குறிப்பு, நண்டங்கரை ஓடை

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து புறப்பட்டு வரும் பல இயற்கை நீரோடைகள் இந்நதியின் முக்கியமான நீர் ஆதாரங்களாக உள்ளது. அத்தகைய ஓர் ஓடை தான் மசவரம்பு ஓடை. நொய்யலின் மற்றுமொரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது நண்டங்கரை ஓடை. அதன் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுவே நொய்யலின் ஆற்றில் அமைந்துள்ள முதல் நீர்த்தேக்கமாக உள்ளது. காட்டுப்பகுதியிலுள்ள யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களுக்கு தாகம் தணிக்கும் நீர்நிலையாகவும் உள்ளது.

இவ்வாறு நீர்வீழ்ச்சிகளாக, காட்டாறாக, சிற்றோடைகளாக பயணித்து, பரிணமித்து வரும் நொய்யல் நதியாக உருவெடுக்கும் இடம் இந்த கூடுதுறைதான். (நொய்யலுக்கு காஞ்சிமா நதி, பெரியாறு என்றும் பெயர்கள் இருப்பதாகச் சொல்கிறது பேரூர் புராணம்)

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com