`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

Share

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் ஒருவரான செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரைக்கால் சென்றிருக்கும் அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் வருகின்ற 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும்.

அப்போதும் முதல்வர் ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரது தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதேபோல நடிகர் விஜய்யின் அரசியல் புதுச்சேரியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

சபாநாயகர் செல்வம்

சபாநாயகர் செல்வம்

அவர் மட்டுமல்ல, புதுச்சேரியில் எந்த நடிகரின் அரசியல் தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களையே, புதுச்சேரி மக்கள் ஆதரிப்பார்கள். அவர்களுக்குத்தான் இங்கு வாய்ப்பு. புதுச்சேரி சட்டப்பேரவை விரைவில் கூடும். அப்போது மக்களுக்கான நிறைய திட்டங்கள் வெளியாகும்” என்றார்.

நடிகர் விஜய்யும், முதல்வர் ரங்கசாமியும் சமீப காலமாக அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அதனால் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் த.வெ.க-வுடன், முதல்வர் ரங்கசாமி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், சபாநாயகரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com