‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் தோனி… ‘Thala For a Reason’ – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | CM Stalin congratulates Dhoni on being inducted into the Hall of Fame list

Share

சென்னை: “உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட் கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்,” என்று ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி-யின் பெருமைமிகு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துகள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ‘Thala For a Reason’ என்ற புகழுரை ஓயாது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com