இணையத்தில் வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோவில், மணமகள் பிரியா “Gallan Goodiyan’ என்ற பாலிவுட் பாடலுக்கு நடமாடுவதையும் ரின்கு சிங் வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிகிறது.
பிரியா சரோஜின் அப்பா துஃபானி சரோஜ் கேராகட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிரியா சரோஜ் 2024-ம் ஆண்டு தேர்தலில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்ற பிரியா, 2022-ம் ஆண்டு அவரது தந்தையின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது உத்தரபிரதேச அரசியலில் கவனிக்கப்பட்டார்.
இவர்களது திருமணம் உத்தரபிரதேசம் முழுவதும் பேசப்படும் நிகழ்வாக மாறியிருக்கிறது.