Bengaluru சாதித்தது எப்படி?
CBRE அறிக்கை, தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதற்கான செலவீனம், வல்லுநர்கள் எளிதாக கிடைக்கும் தன்மை (Availability) மற்றும் தரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் 115 சந்தைகளை பட்டியலிட்டுள்ளது.
அதிகமான வல்லுநர்கள் இருப்பதனால் மட்டுமல்ல அவர்களின் தனித்திறமை, ஏஐ உள்ளிட்ட சிறப்பு திறன்களில் அவர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் பெங்களூரு தனித்து நிற்கிறது.
பெங்களூரில் அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப சந்தைகளில் காணப்படும் அளவுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவின் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
பெங்களூருவின் மக்கள் தொகையில் 75.5% பேர் வேலை செய்யும் வயதுள்ள நபர்கள். இவர்களின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே 2.4% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘
பெங்களூருவின் வலிமையான ஸ்டார்ட் அப் சூழலும் இதற்கு காரணம். 2024 ஆம் ஆண்டில் மட்டும், பெங்களூரு $3.3 பில்லியன் மதிப்புள்ள 140 VC ஒப்பந்தங்களைப் பெற்றது, அவற்றில் 34 AI சம்பந்தப்பட்டவை.
டெல்லி-என்.சி.ஆர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களும் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.