Eng vs Ind; virat kohli; test cricket; michael clarke; டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மீண்டும் திரும்புவது குறித்து மைக்கேல் கிளார்க்

Share

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவு என்னவாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதிலிருந்து கோலி மீண்டும் வருவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.

Virat Kohli - விராட் கோலி

Virat Kohli – விராட் கோலி

Beyond23 கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய மைக்கேல் கிளார்க், “இங்கிலாந்துக்கெதிராக இந்தியா 5 – 0 எனத் தொடரை இழந்தால், ஓய்விலிருந்து கோலி வெளியே வந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.

இங்கிலாந்தில் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டால், புதிய கேப்டன், அணித் தேர்வாளர்கள், ரசிகர்கள் அவரிடம் கேட்டால் கோலி அணிக்குத் திரும்புவார்.

மைக்கேல் கிளார்க்

மைக்கேல் கிளார்க்

அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறார். இந்த ஃபார்மெட்டில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

இருப்பினும், இங்கிலாந்தில் 5 – 0 என இந்திய அணி தோற்கும் என்று நான் நினைக்கவில்லை.

கோலி, ரோஹித் இல்லாமல் கூட இங்கிலாந்தில் இந்தியா வெற்றி பெற முடியும். இந்திய அணி நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com