MI vs GT: ஒரே ரன்னில் வெளியேறிய சுப்மன் கில் – டிரென்ட், பும்ரா பந்துவீச்சை குஜராத் சமாளிக்குமா?

Share

 MI vs GT, IPL 2025, Live Updates

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அட்டகாசமான துவக்கத்தை வழங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி

இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

நியூ சண்டிகரில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி மோதி வருகின்றது.

புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று, 3வது இடம் பிடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேபோல, 16 புள்ளிகள் பெற்று வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தை மும்பை பிடித்ததால் இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும்.

மும்பை, குஜராத் அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் 2 முறை மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. 5 முறை குஜராத் அணி வென்றிருப்பதால் குஜராத் அணியின் கைதான் ஓங்கி நிற்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com