எந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள்.
செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.
நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.
எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
பழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள், தேதி போன்றவற்றையும் நினைவுகூர முயற்சி செய்யலாம்.

கணக்கு தொடர்பான புதிர்கள், விளையாட்டுகளைப் பொழுதுபோக்காகச் செய்துவந்தால், நல்ல மாற்றம் தெரியும்.
ஷாப்பிங்குக்காக வெளியே செல்லும்போது, லிஸ்ட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நீங்களாக ஞாபகப்படுத்தி பொருள்களை வாங்குங்கள். இறுதியாக செக் செய்யுங்கள்.
குறைந்தது ஐந்து பேரின் எண்களாவது நினைவில் இருக்கட்டும். இது, உங்களுக்கு ஞாபகசக்தியைக் கொடுப்பதோடு, அவசரத்தில் கை கொடுக்கும்.
கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த, ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.
தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை கவனத்தை ஒருமுகப்படுத்தும்.
ஸ்போர்ட்ஸ், நடைப்பயிற்சி, வீட்டு வேலை என உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். ஞாபகமறதி வியாதி கிடையாது” என்று முடிக்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.