பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய ஆர்சிபி! | PBKS vs RCB Live Score, IPL 2025 Qualifier 1: Royal Challengers Bengaluru beats Punjab Kings

Share

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2-வது ஓவர் தொடங்கி சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது.

ப்ரியன்ஷ் 7, பிரப்சிம்ரன் 18, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2, ஜாஸ் இங்கிலிஸ் 4, நேஹல் வதேரா 8, ஷஷாங் சிங் 3, முஷீர் கான் 0, ஸ்டாய்னிஸ் 26, ஹர்ப்ரீத் பிரார் 4, ஓமர்சாய் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆர்சிபி தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். யஷ் தயாள் 2, புவனேஸ்வர் மற்றும் ஷெப்பர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. முதலில் இறங்கிய ஃபில் சால்ட் 27 ரன்களில் 56 ரன்கள் விளாசினார். மறுமுனையில் ஆடிய விராட் கோலி 12 ரன்களில் ஜோஷ் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 19 ரன்கள், ராஜத் பட்டிதார் 15 ரன்கள் என வெறும் 10 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற்றது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com