மிஸ் வேர்ல்ட் 2025: மிஸ் இங்கிலாந்து மில்லா மேகீ திடீரென விலக என்ன காரணம்?

Share

  மிஸ் வேர்ல்ட், உலக அழகிப் போட்டி, இந்தியா, தெலங்கானா, மிஸ் வேர்ல்ட் இங்கிலாந்து,

பட மூலாதாரம், Bamboophotolab/Instagram

மே 25, இன்று தமிழ் நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

மிஸ் இங்கிலாந்து 2024 பட்டத்தை வென்ற மில்லா மேகீ இந்தியாவில் நடைபெற்று வரும் மிஸ் வேர்ல்ட் 2025 என்ற உலக அழகிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக கூறியதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

24 வயது அவரான அவர் மே 7-ஆம் தேதி ஹைதராபாத்தை வந்தடைந்தார். மே 16-ஆம் தேதி அன்று உலக அழகிப் போட்டியில் இருந்து விலகி தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பினார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லேட் க்ராண்ட் தற்போது பிரிட்டன் சார்பின் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார் என்று உலக அழகி போட்டி அமைப்பின் பிரதிநிதி உறுதி செய்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com