பழங்கால அரங்கில் நடந்த மனித – சிங்க சண்டை: எலும்பில் பதிந்த வரலாறு!

Share

கிளாடியேட்டர், வரலாறு, தொல்லியல், விலங்குகள்

பட மூலாதாரம், Universidade de York

படக்குறிப்பு, இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவை

  • எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில்
  • பதவி, பிபிசி நியூஸ்

ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு பகுதியில் பல் தடங்களும், சேதங்களும் இருந்தன. அவை ஒரு சிங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிபுணரான பேராசிரியர் டிம் தாம்ப்ஸன், சிங்கம், புலி போன்றவற்றுடன் கிளாடியேட்டர்கள் சண்டையிட்டதற்கான முதல் ‘நேரடி ஆதாரம்’ இதுதான் என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com