இவரைப்போலவே, ஷியா மதகுரு மௌலானா யாசூப் அப்பாஸ், “இதுவொரு மலிவான விளம்பரம். ஷமியின் தனிப்பட்ட விருப்பத்தை பொதுப் பிரச்னையாக மாற்றக் கூடாது.” என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லியின் மோதி மசூதியின் இமாம் மௌலானா அர்ஷாத், “ஷமியைக் கேள்வி கேட்பவர்களுக்கு இஸ்லாமோ, குரானோ புரியவில்லை. ஒரு பயணி நோன்பைத் தவிர்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார், “நாட்டுக்காக விளையாடும்போது, நோன்பு இருப்பது ஆட்டத்தில் தனது செயல்திறனைப் பாதிக்கும் என்று ஷமி உணர்ந்தால், அவரால் தூங்கவே முடியாது. அவர், இந்திய அணியைப் பலமுறை வெற்றிபெறச் செய்தவர். எனவே, விளையாட்டில் மதம் கூடாது. இன்று நீங்கள் எந்தவொரு இஸ்லாமியரிடம் கேட்டாலும், ஷமியை நினைத்துப் பெருமைப்படுவதாக அவர் கூறுவார்.” என்று ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.