இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர், இதுபோன்ற ஒவ்வொரு போட்டியும் தாங்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்றும், 2027-ல் தங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தங்கள் இலக்கு என்று தெரிவித்திருக்கிறார்.
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராப் வால்டர், “நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும், பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், இன்று மிகப்பெரிய பாடம். நீங்களே அதை உணர்வீர்கள்.

இருப்பினும், நிறைய விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரு அணியாக நாங்கள் இன்னும் வளர்ந்து வருகிறோம். அதில் எந்த சந்தேகமுமில்லை. 2027-க்கு (ஒருநாள் உலகக் கோப்பை) இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. அதன்மீது தான் எங்கள் இலக்கு இருக்கிறது.” என்று கூறினார்.