காமென்வெல்த் போட்டிகளில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருக்கிறார். ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தேசிய அளவிலான போட்டிகள் என பலவற்றிலும் அடுத்தடுத்து பதக்கங்களை வென்றிருக்கிறார். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை வென்றிருக்கிறார்.
இந்நிலையில், வரவிருக்கும் WTT World Contender தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை சென்னையில்தான் ஆடினேன். என்னுடைய கடைசிப் போட்டியையும் சென்னையிலேயே ஆட விரும்புகிறேன். காமன்வெல்த், ஆசிய போட்டி மெடல்களை வென்றிருக்கிறேன். ஒலிம்பிக் மெடலை வென்றதில்லை. ஆனால், வருங்கால தலைமுறைக்கு பயிற்றுவித்து அவர்களின் மூலம் என் கனவை நிறைவேற்றிக் கொள்வேன்.’ என்றார்.