சிலி ஓபன் டென்னிஸ்: ரித்விக் ஜோடி சாம்பியன் | Chile Open: Rithvik Choudary Bollipalli wins doubles title

Share

புதுடெல்லி: சான்டியாகோவில் நடைபெற்று வந்த சிலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலி பள்ளி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன் டோஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரித்விக், நிக்கோலஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேக்ஸிகோ கோன்சாலஸ், ஆந்த்ரஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது.

துபாய் ஏடிபி டென்னிஸ்: யூகி ஜோடிக்கு முதலிடம்

துபாய்: துபாயில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின் ஜோடி முதலிடம் பிடித்தது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டி பாம்ப்ரி, அலெக்ஸி ஜோடி 3-6, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

பிராக்: செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வரும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். பிராகில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரும் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய பிரக்ஞானந்தா 44-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து முழு புள்ளியைப் பெற்ற பிரக்ஞானந்தா மொத்தம் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம் இந்தச் சுற்றில் அமெரிக்காவின் சாம் ஷங்க்லாண்டுடன் டிரா செய்தார். அவரும் மொத்தம் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிரக்ஞானந்தாவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், வியட்நாமின் குவாங் லீம் லீ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com