அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யானை திரைப்படத்தை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க – நயன்தாராவின் திருமண பரிசாக அமையுமா O2 திரைப்படம்?
ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மூன்றாம் தேதி வெளிவந்த விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருவதால் யானை திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.
இதன் காரணமாக தங்கள் படத்தின் வெளியீட்டை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்குமாறு விநியோகஸ்தர்கள் யானை படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர்.
Also read… பொன்னியின் செல்வன் நாவலை ஏன் சினிமாவாக எடுக்க வேண்டும்? – ஜெயமோகன்
இதைத்தொடர்ந்து தற்போது யானை திரைப்படத்தின் வெளியீடு ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹரி அருண் விஜய் உள்ளிட்ட யானை படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
With all due respect to #Vikram we are postponing our #Yaanai worldwide release to July 1st
Wishing @ikamalhaasan sir @Dir_Lokesh and @RKFI for the record breaking success – Team Yaanai.#YaanaiFromJuly1st@arunvijayno1 #DirectorHari @priya_Bshankar @gvprakash @ZeeTamil pic.twitter.com/87vyF5KuDo
— Drumsticks Productions (@DrumsticksProd) June 13, 2022
அத்துடன் விக்ரம் திரைப்படம் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
Most anticipated #Yaanai 🐘 trailer is here
▶️ https://t.co/5m8QQYv3xcMass loaded Visuals #YaanaiTrailer #YaanaiFromJune17 @arunvijayno1 #DirectorHARI @priya_Bshankar @realradikaa @iYogibabu @gvprakash @thondankani @Ammu_Abhirami @gopinath_dop @ertviji @KKRCinemas pic.twitter.com/tCFp53IQyc
— Drumsticks Productions (@DrumsticksProd) May 30, 2022
யானை படத்தின் வெளியீடு ஜூலை 1ஆம் தேதிக்கு செல்கிறது என நியூஸ் 18 முன்னரே கூறியிருந்த நிலையில் இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.