சண்டிகருக்கு 403 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தமிழக அணி | Tamil Nadu set a target of 403 runs for Chandigarh.

Share

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் அணிகள் இடையிலான போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி ஆந்த்ரே சித்தார்த் (106) விளாசிய சதத்தின் உதவியுடன் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

97 ரன்கள் உதவியுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 72.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விஜய் சங்கர் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 150 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 89 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 402 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சண்டிகர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com