ராபர்ட் டி நொபிலி: மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்

Share

ஐரோப்பிய ஜெசுவிட்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகலாயப் பேரரசர் அக்பரை, 1580இல் ஐரோப்பிய ஜெசுவிட்கள் சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியம்

மிஷினரிகளின் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர் மனு பிள்ளை எழுதியிருக்கும் புதிய புத்தகமான ‘Gods, Guns and Missionaries’ பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

வரலாற்றாசிரியரான மனு பிள்ளையின் முந்தைய புத்தகங்களான The Ivory Throne: Chronicles of the House of Travancore, Rebel Sultans: The Deccan from Khilji to Shivaji, False Allies: India’s Maharajahs in the Age of Ravi Varma மிகுந்த கவனத்தைப் பெற்றவை. இந்த வரலாற்று நூல்கள், அவை எழுதப்பட்ட சுவாரஸ்யமான விதத்திற்காகவே மிகவும் பாராட்டப்பட்டவை.

மனு பிள்ளை எழுதி தற்போது வெளிவந்திருக்கும் Gods, Guns and Missionaries: The Making of the Modern Hindu Identity நூலும் அதைப் போலவே பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்தப் புத்தகம் அடிப்படையில், கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் எப்படி செயல்பட்டன, அவர்களுடைய மதம் பரப்பும் முயற்சிகள் எப்படி பலதரப்பட்ட தன்மையில் இருந்தன, அதற்கு உள்ளூர் மக்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பதைச் சொல்லும் புத்தகம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com