இந்தியா:
இந்தியாவைப் பொறுத்தவரை இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா – இலங்கை தொடரைப் பொறுத்தே இருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தொடரில் ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 55.26 சதவிகிதத்துடன் சமநிலையில் இருக்கும்.
அப்போது, அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற கணக்கில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மேலும், ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்டில் தோற்று, இலங்கைக்கெதிரான தொடரில் 0 – 1 அல்லது 0 – 2 என தொடரை இழந்தால், இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும். இது எதுவும் நடக்காமல், சிட்னி டெஸ்டில் இந்தியா டிரா செய்தால்கூட, திரும்பிப் பார்க்காமல் அடுத்த WTC தொடருக்குத் தயாராக வேண்டும்.