Koneru Humpy: தந்தையின் பயிற்சி; சூப்பர் கம்பேக் – இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கோனேரு ஹம்பி யார்?

Share

உலக ரேபிட் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இந்தத் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி மற்றும் ஹரிக்கா துரோணவள்ளி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 11-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ஐரீன் சுகந்தரை கோனேரு ஹம்பி வீழ்த்தி 8 1/2 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மோடி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருகின்றனர்.

மோடி, கோனேரு ஹம்பி

வெற்றிபெற்றது குறித்து பேசிய கோனேரு ஹம்பி, “இது எனது இரண்டாவது உலக ரேபிட் பட்டம். நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உண்மையில், இறுதிப்போட்டி டை-பிரேக்கரை நோக்கி செல்லும், கடினமான ஒருநாளாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் நான் ஆட்டத்தை முடித்ததும், நடுவர் என்னிடம் வெற்றி பெற்றதாகக் கூறினார். மிகவும் பதட்டமான தருணமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

37 வயதான கோனேரு ஹம்பி ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே செஸ் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். இதன் மூலம் முதல் இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட், ஆசிய விளையாட்டுகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று குவித்திருக்கிறார்.

கோனேரு ஹம்பி

சதுரங்கத்தில் மிகவும் வலிமையான நபர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவருக்கு அவர் தந்தை கோனேரு அசோக்தான் பயிற்சி அளித்திருக்கிறார். ஏற்கனேவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் கலந்துகொண்டு உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் கோனேரு ஹம்பி பிரசவம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் செஸ் விளையாட்டில் களமிறங்கி 2024 ஆம் ஆண்டிற்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவைப் பெருமை அடைய செய்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் கோனேரு ஹம்பி!!!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com