பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்ற இவர்கள் என்ன ஆனார்கள்? ஒரு தந்தையின் கண்ணீர்

Share

கிரீஸ், படகு விபத்து, பாகிஸ்தான், புலம் பெயர்ந்தவர்கள்

பட மூலாதாரம், Ammar Bajwa/ Naveed Asghar

படக்குறிப்பு, முகமது சுஃப்யான் (இடது) மற்றும் முகமது அபித் (வலது) ஆகியோர் கிரீஸில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்கள்

சௌதி அரேபியாவில் மரத் தச்சராக பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் இக்பால் என்பவர் தனது 13 வயது மகனை ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு குறித்து தற்போது மிகவும் வருந்துவதாக ஜாவேத் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

“இதற்கான ஏஜென்டுகள் எனது கிராமத்திலிருந்து பல சிறுவர்களை கிரீஸ் மற்றும் இத்தாலி நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். அவர்களின் பேச்சில் வசப்பட்ட எனது மகன், ‘நீங்கள் என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பவில்லை என்றால், நான் வீட்டை விட்டு வெளியேறுவேன்’ என்று எங்களிடம் மீண்டும்மீண்டும் சொல்லி வந்தார்”, என்று ஜாவேத் கூறுகிறார்.

கடந்த வாரம் இதுபோன்ற புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் கிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்ததில் பாகிஸ்தானை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அதில் ஜாவேத்தின் மகன் முகமது அபித்தும் அடங்குவார்.

தங்கள் குழந்தைகளை, பாகிஸ்தானை விட்டு செல்வதற்கு இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பெற்றோரிடம் அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com