INDvPAK: பார்டரில் மைதானம்; இந்தியாவுக்கு ஒரு கேட்; பாகிஸ்தானுக்கு ஒரு கேட் – பாக் வீரரின் பலே ஐடியா

Share

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் பொதுவான ஒரு நாட்டில் நடக்குமென்றும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளின் பார்டரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்ட வேண்டும் என பாகிஸ்தான் வீரர் அஹமது சேஷாத் கூறியிருக்கிறார்.

Champions Trophy 2025 – ICC

‘இந்தியாவை பாகிஸ்தானுக்கு வரவழைக்கும் வாய்ப்பு ஒன்று கிடையாது. 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்தப்போகிறோம் என ஐ.சி.சி கூறியதற்கு 2021 இல் அத்தனை நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டது. ஐ.சி.சியும் பின் வாங்கியிருக்கக்கூடாது. ஆனால், நாம் அதையெல்லாம் மறந்தே ஆக வேண்டும். நான் சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசும்போது ஒரு ஐடியாவை சொல்லியிருந்தேன். அதாவது, இந்தியா – பாகிஸ்தான் பார்டரில் ஒரு மைதானத்தை கட்ட வேண்டும்.

அதில் இந்தியாவின் பக்கத்தில் ஒரு கேட்டும் பாகிஸ்தானின் பக்கத்தில் ஒரு கேட்டும் அமைத்து அந்தந்த அணிகள் அந்த கேட் வழியாகவே வந்து ஆடிவிட்டு செல்ல வேண்டும். அப்படி வைத்தால் கூட பிசிசிஐக்கும் இந்தியாவுக்கும் பிரச்னையாகத்தான் இருக்கும். அவர்களின் வீரர்கள் பீல்ட் செய்யும் போது எங்கள் பகுதிக்கு வர விசா தேவைப்படும். அதைக்கூட அவர்கள் ஏற்பாடு செய்து தரமாட்டார்கள்.’ என வேடிக்கையாக தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

Ahmed Shezad

பாகிஸ்தான் வீரரின் விமர்சனத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com