ரஷ்யா: ஆட்சி குறித்து கேள்வி எழுப்பிய பிபிசி ரஷ்ய ஆசிரியர் – புதின் கூறிய பதில்
வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புதின் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த நிகழ்வில், பொதுமக்கள், வெளிநாட்டு ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு புதின் பதிலளித்தார்.
நாட்டின் அரசு ஊடகத்தில் இது நேரலை செய்யப்பட்டது. ரஷ்யா-யுக்ரேன் விவகாரம், சிரியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, ரஷ்யாவின் தீவிரமான அணுசக்திக் கொள்கை, உள்நாட்டுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து புதின் பேசினார்.
அதிபர் போரிஸ் யெல்ட்சின், 25 ஆண்டுகளுக்கு முன் முந்தைய விட்டுச் சென்ற நிலையைவிட தற்போது ரஷ்யா சிறந்த நிலையில் இருப்பதாக உணர்கிறீர்களா என பிபிசியின் ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த புதின், ரஷ்யா தனது இறையாண்மையை மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு