ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் – Dinakaran

Share

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நேற்றுமுன்தினம்பூரிவாக்கம், அத்தங்கிகாவனூர், அழிஞ்சிவாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார்.மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் டி.கே.முனிவேல், முருகன், துர்கா, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் உதயகுமார், முனுசாமி, சுந்தரம், நாகராஜ், கவியரசன் ஆகியோர் வரவேற்றனர்.இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பகலவன், பரிமளம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் பாஸ்கர், நவமணி, சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சசிகலா உதயகுமார், மதன் சத்யராஜ், செந்தமிழன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com