தாலி மட்டும்தான் தங்கம்… நயன் அணிந்திருந்த மத்ததெல்லாம் பல கோடி மதிப்புள்ள வைரமும், மரகதமும்தான்! -Nayanthara-s wedding jewels cost in crores made of Diamond and Emerald

Share

இதனை கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்கள் வடிவமைத்துள்ளனர். நயனின் பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் ‘மோட்டிவ்’ டிசைன்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. மேலும் விக்கி, நயன் இருவரின் பெயர்கள், காதலைப் பறைசாற்றும் பேட்டர்ன்கள் என சின்ன சின்ன வடிவங்களால் பிளவுஸ் முழுவதும் டிசைன் செய்யப்படடிருந்தது.

கரிஷ்மா மற்றும் மோனிகா டிசைன் செய்த புடவையில் நயன்...

கரிஷ்மா மற்றும் மோனிகா டிசைன் செய்த புடவையில் நயன்…

சிவப்பு நிறப் புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் வைடூரிய அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் நயன்தாரா. மூன்று வகையான அணிகலன்களை அவர் கழுத்தில் அணிந்திருந்தார். கழுத்தையொட்டி அணிந்திருந்த சோக்கர் வைடூரியம் மற்றும் போல்கி கற்களால் ஆனது.

இரண்டாவதாக மரகதத்தால் ஆன ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மகரதக் கற்களால் ஆனது. மேலும் நயன் அணிந்திருந்த கம்மலில் cabchon என்ற கல் வகையைச் சுற்றி வைடூரிய கற்கள், வைர கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. நயன் அணிந்திருந்த வளையலும் மரகதக் கற்களால் ஆனது. இந்த நகை இந்திய மதிப்பின்படி கோடிகளைத் தாண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com