ரூ.799க்கு 400 வகை உணவுகள்; சொதப்பிய கொங்கு உணவுத் திருவிழா.. கொந்தளித்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?

Share

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் இரண்டு நாட்கள் (நேற்று, இன்று) ஆகிய இரண்டு நாள்கள் கொங்கு உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சைவம் மற்றும் அசைவத்தில் ஏராளமான உணவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

இதில் பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதற்காக சமூகவலைத்தளங்களில் சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் கொடுத்தனர். இதனால் மக்களிடம் பெரியளவு எதிர்பார்ப்பு இருந்தது.

100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. சைவ, அசைவ உணவுகளுடன் துரித உணவுகள், பழச்சாறுகளும் வைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள பெரியவர்களுக்கு ரூ.799, குழந்தைகளுக்கு ரூ.499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

புக் மை ஷோ மூலம் தான் டிக்கெட் புக் செய்ய முடியும். எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் டிக்கெட்கள் முழுமையாக விற்று தீர்ந்தன. சுமார் 400க்கும் மேற்பட்ட உணவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

டிக்கெட் முன்பதிவு செய்தால் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீக் எண்ட் என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் சென்றிருந்தனர்.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

உள்ளே நுழைந்தவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. எங்குத் திரும்பினாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் உணவுக்காக தட்டுகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

உணவு சரியாக வேகாமல், சுவை இல்லாமல் இருந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு முறையாகப் பதில் அளிக்கவில்லை என்பதால் மோதல் வெடித்தது.

“ரூ.1,000 வாங்கிவிட்டு எதைக் கேட்டாலும் இல்லை என்கிறார்கள்.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

பணம் சும்மாவா கொடுக்கிறோம். வாங்கிய பணத்துக்கு முறையாக சர்வீஸ் கொடுங்கள். ஏதோ இலவசமாக கொடுப்பதைப் போல அதிகாரம் செய்கிறார்கள்.

இந்தப் பணத்துக்கு ஸ்டார் ஹோட்டலில் நன்றாக சாப்பிட்டிருக்கலாம். இங்கு கேவலமாக உள்ளது. சுவையும் இல்லை. பாதி வெந்தும், வேகாமலும் இருக்கிறது.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

பல கோடி வசூல் செய்திருப்பார்கள். ஆனால், யாருக்கும் எந்தப் பொருளும் தர மறுக்கிறார்கள்.” என்று ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கைக்கழுவதற்குக் கூட உரிய ஏற்பாடு செய்யவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் ஷார்ட் சர்க்யூட் ஆகி மக்களுக்கு ஷாக் அடித்துள்ளது. டிக்கெட் புக்கிங்கில் இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தெரிந்தும், உரிய ஏற்பாடுகள் செய்யாமல் மோசடி செய்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

அடுத்தடுத்து விமர்சங்களால் இந்த உணவுத் திருவிழாவுக்கு டிக்கெட் புக் செய்த பலர் திட்டத்தை ரத்து செய்துள்ளனர். சிலர் டிக்கெட்டை தள்ளுபடி விலைக்கு விற்கவும் பதிவு போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோஸியேசன் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். மழை எச்சரிக்கை காரணமாக கவுன்டர்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றினோம்.

கோவை கொங்கு உணவுத் திருவிழா

இந்த கடைசி நேர மாறுதலால் மக்களுக்கு அசௌகரியும் ஏற்பட்டுள்ளது.  இன்று கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். உணவுப் பகுதியையும் விரிவாக்கம் செய்துள்ளோம்.“ என்று கூறியுள்ளனர்.  

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com