தீபாவளி: பலகாரம் செய்ய ஒரே எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவதால் என்ன பிரச்னை?

Share

தீபாவளி -  ஸ்வீட், காரம் தின்பண்டம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

தீபாவளி என்றாலே ஸ்வீட்ஸ் என்று எல்லோருடைய நினைவுக்கு வந்தாலும், அதிரசம் போன்ற இனிப்புகளுடன், முறுக்கு, சீடை போன்ற பாரம்பரியமான பலகாரங்களையும் செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. சமீப காலமாக, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலுமே இனிப்பு, காரம் அனைத்தையும் கடைகளில் வாங்குவது அதிகமாகிவிட்டது.

வர்த்தகப் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஸ்வீட்ஸ் வாங்கினால் காரம் இலவசம் என்று கடைகளில் விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்தப் போட்டியில் விலையை குறைப்பதற்காக, அந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது தரத்தில் சமரசம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“ஸ்வீட்டை விட காரத்தில்தான் ஆபத்து அதிகம்”

இவற்றை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையினர், தமிழகம் முழுவதும் தீபாவளியை ஒட்டி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், கோவை நகரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் ஓட்டல்கள், ஸ்வீட்ஸ் கடைகள் மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்புக் கூடங்களில் பரவலாக ஆய்வுகளை நடத்தினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com