எனவே விஜய் சேதுபதியைக் கமிட் செய்ததில் சேனலுக்கு இப்போது ரொம்பவே ஹேப்பியாம். இருந்தாலும் சில போட்டியாளர்கள் கன்டென்டுக்காக வேண்டுமென்றே வலிந்து சில செயல்களைச் செய்து வருகின்றனர் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த சீசனின் போட்டியாளர்களாக “செல்லம்மா’ தொடரில் நடித்த அர்னவ் அன்ஷிதா இருவரும் தேர்வான போதே ‘கன்டென்ட் இருக்கு’ என யூகித்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
அர்னவ் அவரின் மனைவி திவ்யா இருவருக்குமிடையில் பிரச்னை உருவானதற்கு அன்ஷிதாவே காரணம் என்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய விவகாரமாகப் பேசப்பட்டது. சர்ச்சைக்குரிய ஒரு ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. பிக் பாஸ் வீட்டுக்குள் இவர்கள் இருவரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் சூழலில், சில தினங்களுக்கு முன் சக போட்டியாளர் முத்துக்குமாரிடம் அன்ஷிதா போட்ட சண்டை பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்றைய டாஸ்க் ஒன்றில் அன்ஷிதாவுக்கு `சொம்பு துாக்கி’ என்ற பட்டத்தை அர்னவ் கையால் கொடுக்க கலங்கிப் போய்விட்டார் அன்ஷிதா. இதை வேற யாராவது குடுத்துருந்தா நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன் நீ கொடுத்துருக்கக் கூடாது என அழுதுவிட்டார்.
அன்ஷிதா குறித்தும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடுவது குறித்தும் அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசினோம்.


”சொந்த ஊர் கேரளா. ‘செல்லம்மா’ தொடரில் கமிட் ஆன பிறகு அர்னவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாங்க. அர்னவ் திருமணமானவர்னு தெரிஞ்சும் இவர் பழகியதை தான் பலரும் விமர்சிக்கிறாங்க. ஆனா அர்னவ் தான் அவங்க கிட்ட, திவ்யாவுக்கும் தனக்கும் செட் ஆகலைன்னு சீக்கிரத்திலேயே திவ்யாவை டைவர்ஸ் பண்ண போவதாகவும் சொல்லி அன்ஷிதாவை குழப்பி விட்டு, கன்வின்ஸ் செய்து தேவையில்லாம அவருடைய குடும்ப சிக்கலுக்குள் இவங்களையும் இழுத்துவிட்டார்.