“எனக்கு சொந்த ஊரு கும்பகோணம். நான் சென்னையில் தான் காலேஜ் படிச்சேன். படிச்சி முடிச்சிட்டு ஒரு கம்பெனில ஒரு வருசம் வேலை பாத்திட்டு இருக்கும் போதே, நடிக்க ஆர்வம் இருந்ததுனால நிறைய கம்பெனிக்கு போய் வாய்ப்பு கேப்பேன். அந்த ஆபிஸ்ல படம் பண்றாங்களான்னு கூட தெரியாது. எல்லா அபிஸூக்கும் போய் போட்டோ குடுத்து டிரை பண்ணிட்டே இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்ச ப்ரண்ட்ஸ் மூலமா ஒரு சீரியலில் வயசான கேரக்டர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.
அதுக்கு அப்புறம் தான் ஒவ்வொரு சீரியலயும் சின்ன சின்ன கேரக்டரா நடிக்க ஆரம்பிச்சேன். என்னோட நடிப்பை பார்த்து நிறைய பேரு நீங்க நல்லா காமெடி பண்றீங்கன்னு சொல்லுவாங்க. வில்லனாவும் நல்லா நடிக்கிறீங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு இரண்டு விதமாவும் கமெண்ட்ஸ் வந்திருக்கு.
ஒரு தடவை பொண்ணு பார்க்க போகும் போது, “பையன்லாம் நல்லா தான் இருக்காரு. ஆனா பொண்ணுங்களை மோசமா நடத்துறமாதிரி நடிக்கிறாரு. கேவலமா பொண்ணுங்க குளிக்கிறதை எட்டி பார்க்குறாருன்னு சொன்னாங்க.” என சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். முழுமையான வீடியோ இங்கே…