மும்பை: ஆர்டர் செய்த உணவில் இறந்து கிடந்த எலி… பிரபல உணவகத்தின் மீது பகீர் புகார்! | Man complaint against famous restaurant that he found dead rat in food

Share

இதை பார்த்தவுடன் சுக்லாவுக்கு குமட்டலை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் குலாப் ஜாமூனில் இறந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். “நான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. எனது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் இரவு முழுவதும் பல முறை வாந்தி எடுத்தேன். இந்த சம்பவம் குறித்து நான் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தேன். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தனர். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தூய்மைக்கேடான உணவினால் ஏற்பட்ட உடல்நிலை கோளாறு  காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் ஜனவரி 12 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்” என்று அவர் தெரிவித்தார் மருத்துவமனை நிர்வாகம் நாக்பாடா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

“பாந்த்ராவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்க்கும் சென்றேன், ஏனெனில் அவர்களிடம் பேசுமாறு போலீஸார் என்னிடம் கேட்டுக் கொண்டனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று FDA அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி 15-ம் தேதியும் நாக்பாடா காவல் நிலையத்திற்குச் சென்று நள்ளிரவு வரை அங்கேயே இருந்தேன். ஆனாலும் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை,” என்று சுக்லா கூறினார். 

சுக்லா ஆர்டர் செய்த உணவில் இருந்த இறந்த எலியின் படங்கள், அவரின் மருத்துவ செலவிற்கான ரசீது மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை X தளத்தில் பதிவிட்டார்.

X ல் சுக்லாவின் பதிவிற்கு பதிலளித்த பார்பிக்யூ நேஷன், “வணக்கம் ராஜீவ். நீங்கள் அனுபவித்த சிரமத்திற்கு வருந்துகிறோம். மும்பையில் உள்ள அலுவலகத்தை சார்ந்த திரு.பரேஷ், உங்களின் நிலைமையின் விவரங்களை புரிந்துக் கொண்டு, ஒரு தீர்வை நோக்கி செயல்பட உங்களுடன் தொடர்பில் இருப்பார். உங்கள் தேவையை விரைவாக நிவர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டது.

“அதன் பிறகு பார்பெக்யூ நேஷனில் இருந்து பங்கஜ் ராய் என்று ஒருவர் என்னை அழைத்து மன்னிப்பு கேட்டார். இன்று ஷாரிக் என்ற ஒருவர் அழைத்து மீட்டிங் ஃபிக்ஸ் செய்தார். பின்னர் அவர் மீண்டும் அழைத்து அதை ரத்து செய்தார்” என்று சுக்லா தெரிவித்தார்.

இதனிடையே அந்த ஹோட்டல் நிறுவனம், வாடிக்கையாளர் குறிப்பிட்ட நாளில் தங்களின் உணவகத்தில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்றும் அது குறித்து விசாரணை நடத்தியதாகவும், மேலும் விசாரணைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com