MGM 'VARAM': TRAP’ நிலையிலிருந்து தாய் மற்றும் சேயை காப்பாற்றிய எம்ஜிஎம் ஹெல்த்கேரின் ‘வரம்'.

Share

இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல் (டிராப்) என்ற மிக அரிதான பாதிப்புடன் அதிக இடர்வாய்ப்பிலிருந்த கர்ப்பவதிக்கு வெற்றிகர சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் பெண்களுக்கான பிரத்யேக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையமான வரம், அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. பங்களாதேஷை சேர்ந்த Rh இந்த பெண்மணியின் இரத்த புரதம் வளர்கருவின் இரத்த புரதத்திற்கு இணக்கமில்லாத நிலை இருந்ததால் இதற்கு முன்பு மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை. இத்தகைய நிலையில், உயிருள்ள ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க எம்ஜிஎம் ஹெல்த்கேரின் சிகிச்சை ஏதுவாக்கியிருக்கிறது. 

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

2023 செப்டம்பர் மாதத்தில், பல்வேறு சிக்கல்கள் இருந்த தனது கர்ப்பநிலையின் காரணமாக பங்களாதேஷை சேர்ந்த திருமதி. ஜீனத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இயங்கும் வரம் சிகிச்சை மையத்தின் உதவியை தேடிவந்தார். இரட்டை குழந்தைகளுடன் 20 வார கர்ப்பநிலையிலிருந்த அப்பெண்ணிற்கு திரும்ப திரும்ப நிகழும் கர்ப்பம் கலையும் பிரச்சனை இருந்திருக்கிறது. மகப்பேறு நாளிலிருந்து 1 அல்லது 2 நாட்களுக்குள் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சோகமும் இவருக்கு நிகழ்ந்திருக்கிறது. 2016 – ம் ஆண்டில் கர்ப்பம் தரித்த 19 வாரங்களில் கரு கலைந்து விட்டது. 2017 – ம் ஆண்டில் 32 வாரங்களில் 1.7 கிலோ என்ற குறைவான உடல் எடையுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து விட்டது. 2019 – ம் ஆண்டில் 36 வாரங்களில் 2.5 கி.கி பிறப்பு எடையுடன் பிறந்த மற்றொரு குழந்தை 2 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தது. 

இந்த இழப்புகள் இருந்த துயரமான வரலாற்றையும் மீறி இந்த ஆண்டு திருமதி. ஜீனத் 2 வளர்கருக்களுடன் மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்தகால குழந்தைகள் இழப்பின் காரணமாக முறையான வழிகாட்டல் மற்றும் சிகிச்சை பெறுவதற்காக அவர் இந்தியாவிற்கு வந்தார். கருவுற்ற 20 – வது வாரத்தின் போது எம்ஜிஎம் ஹெல்த்கேரின் வரம் மையத்திற்கு அவர் வருகை தந்து அதன் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் கருத்தரிப்பு சிறப்பு நிபுணர் டாக்டர். ஆர் வனிதா ஶ்ரீ – ஐ சந்தித்தார். செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையின்போது வளர்கருக்களுள் ஒன்று இயல்புக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட பல சோதனைகளின் மூலம் TRAP என அழைக்கப்படும்  இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல் பாதிப்பு இருப்பது அவருக்கு உறுதி செய்யப்பட்டது. 

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல் (TRAP)

இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல் வரிசை முறை அல்லது இதயம் இல்லாத இரட்டை குழந்தைகள் கருவில் வளர்வது என்பது மிக அரிதான ஒரு பிரச்சனை. 35,000 கருத்தரிப்புகளில் ஏறக்குறைய ஒரு நிகழ்வில் இப்பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 2 வளர்கருக்களுள் ஒன்று உடலமைப்பு ரீதியாக இயல்பு நிலையிலிருக்கும்போது மற்றொன்று இயல்புக்கு மாறான திசு திரளாக இருக்கும். பொதுவாக இதில் கால்களும், இடுப்பிற்கு கீழே உடலமைப்பும் இருக்கும்; ஆனால் இடுப்பிற்கு மேலே மேல் உடல், தலை அல்லது இதயம் இருக்காது. இதயமில்லாத காரணத்தினால், இந்த நிலையை விவரணை செய்ய ‘Acardiac twin’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. இயல்புக்கு மாறான திசு திரளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய இயல்பு நிலை வளர்கருவின் இதயம் பயன்படுத்தப்படுவதால் இயல்பு நிலையிலுள்ள வளர்கரு ‘pump twin’ என குறிப்பிடப்படுகிறது. திசு திரள் என்ற வளர்கரு உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

இயல்பான கர்ப்ப நிலைகளில் வளர்கருவிலிருந்து வெளியே இரத்தத்தை தாயின் சுழற்சியிலிருந்து ஆக்ஸிஜனை பெறுவதற்காக கருவக சினைக்கொடியை நோக்கி வழக்கமாக தமனிகள் எடுத்துச்செல்கின்றன. துடிக்கும் இதயம் இல்லாத காரணத்தால், இதயமில்லாத திசு திரள் வளர்கரு, கருவக சினைக்கொடியின் எந்த ஒரு பகுதிக்கும் இரத்தத்தை அனுப்புவதில்லை. அதன் அனைத்து இரத்த சப்ளையின் ‘pump twin’ என அழைக்கப்படும் இயல்பான வளர்கருவின் சுழற்சியிலிருந்தே வருகிறது மற்றும் திரும்ப போகிறது.

இரு வளர்கருக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் கருவக சினைக்கொடியின் மேற்புறத்தின் மீது சில தனித்துவமான இரத்தநாள பிணைப்புகளின் வழியாக இது நடைபெறுகிறது. இதயமில்லாத இரட்டை வளர்கருக்கள் இருக்கும்போது இந்த தனித்துவமான இரத்தநாள இணைப்புகள், தலைகீழ் திசையை நோக்கி தமனியில் உள்ள இரத்தம் பாயுமாறு செய்கிறது (இதயமல்லாத திசு திரளிலிருந்து விலகிச் செல்வதற்கு பதிலாக அதை நோக்கி இரத்தம் பாய்வது). இதன் காரணமாக இந்த அரிதான நிலையை விவரணை செய்ய ‘இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல்’ (TRAP) வரிசைமுறை என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. 

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

இயல்பான ‘pump twin’, தனது சொந்த வளர்ச்சியடையும் திசுக்களுக்கு மட்டுமன்றி இதயமல்லாத திசு திரள் வளர்கருவிற்கும் இரத்தத்தை அனுப்புகிற மற்றும் பெறுகிற கூடுதல் பணியை செய்யும் சுமையை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக இயல்பு நிலையிலுள்ள வளர்கருவின் இதயம் இருமடங்கு கடினமாக செயலாற்றுவதால் அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. இயல்பான வளர்கரு இதனால் இதய செயலிழப்பு ஏற்படும் தீவிர ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு சிகிச்சையளிக்காமல் விடப்படும்போது, வழக்கமாக இயல்பு நிலையிலுள்ள இரட்டை குழந்தைகளுள் 50% வரை பிரசவத்திற்கு முன்பே கருவகத்திலேயே இறந்து விடலாம் அல்லது பிறப்பிற்கு பிறகு விரைவிலேயே இறந்து விடலாம்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் வரம் மையத்தில் சிகிச்சை 

இரட்டை குழந்தையை காப்பாற்ற ஒரு சிகிச்சை திட்டத்தை டாக்டர். ஆர் வனிதா ஶ்ரீ உருவாக்கினார். இதயமற்ற திசு திரளுக்கு இரத்தம் பாய்வதை தடுக்க ஒரு ரேடியோ-அதிர்வெண் நீக்கம் (RFA டாக்டர். எஸ். சுதர்சனுடன் இணைந்து மெடிஸ்கானில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதயமற்ற திசை திரளின் அடிவயிற்றுப் பகுதியில் இந்த RFA சாதனம், தாயின் அடிவயிறு மற்றும் கர்ப்பப்பை வழியாக உட்செலுத்தப்பட்டது; அக்கருவியின் முனையின் வழியாக ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டது. இதயமற்ற திசு திரளுக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை இது துண்டித்து விடும். 

மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஃபெட்டல் மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். எஸ். சுதர்சன் இந்த செயல்முறையை விரிவாக விளக்கினார், “ரேடியோ- அதிர்வெண்  (ஆர்எஃப்ஏ) நுட்பத்தில், நாங்கள் ஒரு சிறிய 14 ஜி ஊசியைப் பயன்படுத்துகிறோம் மற்றும் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி ஊசியை அறிமுகப்படுத்துகிறோம். இதய நிறை. இந்த முறையின் மூலம், அகார்டியாக் வெகுஜனத்திற்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது, இதனால் சாதாரண பம்ப் இரட்டை பாதுகாக்கப்படுகிறது மற்றும் இதய செயலிழப்பு அல்லது இறப்புக்கான ஆபத்து கணிசமாகக் குறைவாக உள்ளது. கூடுதலாக, ரேசஸ் ஐசோஇம்யூனிசேஷன் காரணமாக சாதாரண இரட்டையரில் கடுமையான இரத்த சோகையால் கர்ப்பம் சிக்கலாக இருந்தது, இது ரேடியோ அலைவரிசை நீக்கம் செயல்முறைக்குப் பிறகு குழந்தைக்கு மூன்று கருப்பையக இரத்தமாற்றம் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரே கர்ப்பத்தில் இரண்டு பெரிய, மாறுபட்ட சிக்கல்கள் கையாளப்பட்டதன் காரணமாக இது தனித்துவமானது.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் வரம் மையத்தின் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் கருத்தரிப்பு சிறப்பு நிபுணர் டாக்டர். ஆர் வனிதா ஶ்ரீ இதுபற்றி மேலும் விளக்கமளிக்கையில், “ரேடியோ-அதிர்வெண் நீக்க உத்தியில் 17-கேஜ் என்ற சிறிய ஊசியை நாங்கள் பயன்படுத்துகிறோம்; இது ஏறக்குறைய 1 மி.மீ ஆரம் கொண்டது (பிற மருத்துவ செயல்முறைகளில் 3 மி.மீ ஆரம் கொண்ட கருவிகள் தேவைப்படும்). உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலி ஏற்படுவது மற்றும் கருவுற்ற நோயாளிக்கு குறைவான பாதிப்பு போன்ற மிக குறைவான சிக்கல்கள் ஏற்படாத நிலைக்கு இந்த மிகச்சிறிய கருவியை பயன்படுத்துவது வழிவகுக்கும். இந்த வழிமுறையின் மூலம் இதயமில்லாத திசு திரளுக்கு இரத்தம் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது; இயல்பான pump twin – ன் இதயம் பாதுகாக்கப்பட்டது. இதய செயலிழப்பு அல்லது உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இதன் காரணமாக இனி ஏற்படாது” என்று கூறினார்.

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

அவர் மேலும் பேசுகையில், “தன் எதிர்ப்பு இரத்தசோகை, பாஸ்போலிப்பிட் எதிர்ப்பு மற்றும் ஆன்டிபாடி பாசிட்டிவ் உட்பட வேறுபல சிக்கல்களும் இந்நோயாளிக்கு இருந்தன. அத்துடன் Rh-நெகட்டிவ் என்ற சிக்கலும் இப்பெண்ணிற்கு இருந்தது. பாஸ்போலிப்பிட் எதிர்ப்பு மற்றும் ஆன்டிபாடி பாசிட்டிவ் நோய்க்குறி, தமனிகளிலும், நாளங்களிலும் உறைவு கட்டிகளை விளைவிக்கும்; வளரும் குழந்தைக்கு இரத்தம் செல்வதில் தடையை உருவாக்க கூடும். ஆகவே இந்நிலையிருந்த இந்நோயாளிக்கு பிரசவமாகும் வரை இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்த சிக்கல்கள் அனைத்தும் எமது சவால்களை மிக தீவிரமானதாக ஆக்கியிருந்தன; எனவே ஒரு MCA டாப்லர் ஸ்கேன் சோதனை மூலம் கருவின் வளரும் குழந்தை ஒவ்வொரு வாரமும் கண்காணிக்கப்பட்டது. வளர்கருவில் ஹீமோகுளோபின் குறைவான இருந்ததால் கருவகத்திலேயே குழந்தைக்கு இரத்தம் ஏற்றலை மூன்று முறைகள் நாங்கள் மேற்கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.

கீழ்ப்புற அடி வயிற்றில் ஒரு பெரிய சீழ் கட்டியும் இப்பெண் நோயாளிக்கு உருவாகி அது சீழ் பிடித்து அழுகும் நிலைக்கு சென்றதால் அவரது கல்லீரல் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்காகவும் இப்பெண்ணிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இத்தகைய அனைத்து சிக்கல்களும் கருத்தில் கொண்டு சிசேரியன் முறையின் மூலம் 32 வாரங்களில் குழந்தை பிறந்தது. பிறப்பிற்கு பிறகு தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்ட இக்குழந்தைக்கு மாற்றுகை இரத்தமேற்றல் வழியாகவும் மஞ்சள்காமாலைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது (குழந்தையின் ஒட்டுமொத்த இரத்தமும் முழுமையாக மாற்றி செலுத்தப்பட்டது.

இதனை, எம்ஜிஎம் ஹெல்த்கேரின் குழந்தைகள் நல மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலத்துறையின் முதுநிலை நிபுணர் பேராசியர் டாக்டர். பினு நினன் மற்றும் அவரது குழுவினர் வழங்கினர். பிரசவத்திற்கு பிறகு 2 வாரங்களுக்கும் அதிகமான கால அளவில் குழந்தையின் உடல்நிலை மேம்பட செய்வதிலும் மற்றும் மாற்றுகை இரத்தமேற்றலை திறம்பட மேற்கொள்வதிலும் இக்குழுவினரின் பங்கு மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக தாயும் மற்றும் பிறந்த பெண் குழந்தையும் உடல்நலம் தேறியவுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இயக்குநர் டாக்டர். அர்ஜிதா இராஜகோபாலன் கூறியதாவது: “டாக்டர். வனிதா ஶ்ரீ – ன் நிபுணத்துவ வழிகாட்டலுடன் திருமதி. ஜீனத் – ன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உத்வேகம் அளிக்கும் பயணம், எமது மருத்துவ குழுவினரின் மன உறுதியையும், புத்தாக்க முனைப்பையும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. டிராப் தொடர்வரிசை என்ற அரிதான நிலையின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட எமது குழுவினர், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கனிவான பராமரிப்பின் வழியாக ஆரோக்கியமான குழந்தை பாதுகாப்பாக பிரசவிப்பதை உறுதி செய்திருக்கிறது. பெண்களுக்கு நேர்த்தியான உடல்நல சிகிச்சையை வழங்குவதில் வரம் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதிக்கு இச்சாதனை ஒரு நல்ல சாட்சியமாகும்.

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

நோயாளிக்கும் மற்றும் எமது அர்ப்பணிப்பு மிக்க மருத்துவ நிபுணர்களுக்கும் நம்பிக்கை மற்றும் வெற்றியின் ஒருமித்த சங்கம நிகழ்வாக இத்தருணம் இருந்தது. டாக்டர். ஆர் வனிதா ஶ்ரீ – க்கும் குழந்தைகள் நல மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலத்துறையின் முதுநிலை நிபுணர் பேராசிரியர் டாக்டர். பினு நினன் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை இம்மகிழ்ச்சியான தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை சாத்தியமாக்குவதில் அவர்களது தளர்வில்லாத முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கனிவு மற்றும் புத்தாக்கத்துடன் சிகிச்சையையும், உடல்நல பராமரிப்பையும் மேம்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பை இந்த வெற்றிகரமான சிகிச்சை விளைவு அடிக்கோடிட்டு காட்டுகிறது. பெண்களின் ஆரோக்கியத்தில் நம்பிக்கை தரும் ஒளி விளக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் செயலாற்றி வருவதை இந்நிகழ்வு மீண்டும் உறுதி செய்துள்ளது”.

‘வரம்’ குறித்து

நவீன தொழில்நுட்பம் மற்றும் நிகரற்ற சிகிச்சை பராமரிப்பு ஆகியவற்றிற்காக புகழ்பெற்றிருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மதிப்பீடுகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற ‘வரம்’ பெண்களுக்கான சிகிச்சைக்காகவே பிரத்யேகமான சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மையமாகும். வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம், பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் மகப்பேறியல் சேவைகளிலிருந்து மெனோ பாஸ் காலத்தின்போது உடல்நலம் மற்றும் பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயியல் சேவைகள் வரை அனைத்து சேவைகளும் இங்கு கிடைக்கின்றன.

MGM| எம்ஜிஎம் ஹெல்த்கேர்

இம்மாநகரில் வசிக்கும் பெண்களுக்கு தேவையான, முழுமையான மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் உயர் சிறப்பு மையமாக தன்னை இன்னும் வலுவாக நிலைநாட்ட ‘வரம்’ முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அனைத்து வயது பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கு அளவற்ற புரிந்துணர்வு, நிபுணத்துவம் மற்றும் நேர்த்தியான சிகிச்சையின் மூலம் சிறப்பான உடல்நல பராமரிப்பை வழங்குவதே ‘வரம்’ மையத்தின் நோக்கமாகும்.

தாய் மற்றும் சேய் பராமரிப்பு மீது அதிக தகவல்களை பெற +91 44 4524 2407 என்ற எண்ணில் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியில் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இயங்கும் வரம் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com