சாப்பாட்டுக்குப் பிறகு ஸ்வீட் பீடா போடுவது ஆரோக்கியமானதா? தினமும் வெற்றிலை, பாக்கு போடலாமா?
– அமித் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
“ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பீடா சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. ஆனால், ஸ்வீட் பீடாவை அடிக்கடியோ, தினமுமோ சாப்பிடுவது சரியானதல்ல.