‘விண்வெளியில் வீரர்கள் உணவு பட்டியலில் மிஸ் ஆன இட்லி – ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் | No idlis for India’s Gaganyaan astronauts

Share

விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட தனது லட்சிய ககன்யான் ஏவுகணை திட்டத்துக்கான பணியைத் தொடங்க இந்தியா தயாராகி வருகிறது.

நம் கிரகத்துக்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது மிக முக்கியம். அந்த வகையில் விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் பொருள்களில் ஒன்றான அவர்களின் உணவுமுறை குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ககன்யான் திட்டம்

ககன்யான் திட்டம்

இது பற்றி பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், “விண்வெளி வீரர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு இந்திய உணவுகளே வழங்கப்படும். இந்த அசாதாரண பயணத்துக்கான சிறப்பு உணவுப் பொருள்கள் மற்றும் மெனுக்களை உருவாக்க பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

குறைந்த நாள்கள் மட்டுமே பயணம் போன்ற பணிகளில் இட்லி, சாம்பார் போன்றவை மெனுவில் இருக்காது. அதற்கு பதிலாக விண்வெளி வீரர்கள் பதப்படுத்தப்பட்டது போன்ற உணவுகளை உட்கொள்வார்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com