உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு…

Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர்களை ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தற்போது இரு அணி வீரர்களும் இறுதிப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெற்றுள்ள வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான வர்ணனையாளர்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஆங்கில மொழிக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹேடன், நாசர் உசைன் ஆகியோரும், இந்தி மொழிக்கு சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், தீப் தாஸ்குப்தா, ஸ்ரீசாந்த் ஆகியோரும், தமிழ் மொழிக்கு யோ மகேஷ், சடகோபன் ரமேஷ், லட்சுமிபதி பாலாஜி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோரும் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல்களிலும் மொபைல் ஆப்-இல் ஹாட்ஸ்டாரிலும் பார்த்து மகிழலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com