இனிப்பு முதல், ரிச்சான கிரேவிகளுக்கு கூடுதலான சுவையைத் தர முந்திரி பருப்பை பலரும் சேர்ப்பார்கள். முந்திரியை வறுக்கும் போதே எச்சிலூற வைக்கும் வாசனை தோன்றும். அது மட்டுமல்ல, முந்திரியில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துலல்ன. இதில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, பி 6 மற்றும் போலிக் அமிலம் போன்ற பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளதால் இதயத்துக்கு நல்லது. இதோடு இதில் உள்ள கொழுப்பில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான ஓலிக் அமிலம் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் ஃபிரெஷாக இருக்கனுமா.? அப்போ இப்படி ஸ்டோர் பண்ணுங்க..
Share