பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுடன் சம்பந்தப்பட்ட எருமேலி, பம்பா, பந்தளம் உள்ளிட்ட பல இடங்கள் பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. அதில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர் பக்கம் அமைந்துள்ள பொன்னம்பல மேடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தை மாதம் ஒன்றாம் தேதி பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சிதரும் பொன்னம்பல மேடு பக்தர்களுக்கு மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பொன்னம்பல மேடு பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும்.
மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் அனுமதி இன்றி பூஜை – வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போலீஸ்! | Pooja in ponnambala medu without permission, case filed
Share