இம்ரான் கானுக்கு ஜாமீன் – அல் காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Share

இம்ரான் கான்

பட மூலாதாரம், Reuters

அல்-காதர் அறக்கட்டளைக்கு நிதி வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

இதன்படி மே 9ஆம் தேதிக்கு பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வழக்கிலும் அவர் மே 17ஆம் தேதிவரை கைது செய்யப்படக் கூடாது என்று இம்ரான் கான் தரப்பு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் வைத்து எவரையும் கைது செய்ய முடியாது என்று பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு நாளைக்கு பிறகு இந்த உத்தரவை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தனது உரையின் போது, பாகிஸ்தான் டெஹ்ரீக் – இ – இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைமை, நாட்டை அழிவை நோக்கி தள்ள முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com