மூன்று பெற்றோர் குழந்தை: மூன்று பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை – சாத்தியமானது எப்படி?

Share

ஒரே குழந்தையில் 3 பேரின் மரபணுக்கள்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை.

மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களில் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணம் நேரிடலாம். சில குடும்பங்கள் பல குழந்தைகளை இதனால் இழந்துள்ளன. அத்தகைய பெற்றோர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க இந்த தொழில்நுட்பம் மட்டுமே ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com