Doctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? -What is the age to start getting facials?

Share

எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து பயன்படுத்த வேண்டும்? ஆன்டி ஏஜிங் க்ரீம் தேர்ந்தெடுக்கும்போது எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

அடிப்படையான ஒரு கிளீனிங், மசாஜ், பேக்… இவை அடங்கியதுதான் பார்லர்களில் செய்யப்படுகிற ஃபேஷியல் நடைமுறை. பொதுவாக 13 வயதிலிருந்து தொடங்கும் டீன் ஏஜில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பருக்கள் உள்ளிட்ட சரும பிரச்னைகள் வரும். எனவே சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தி, சரியான சருமப் பராமரிப்பு பொருள்களை உபயோகிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அந்த வயதிலிருந்தே ஃபேஷியலை தொடங்கலாம். அதேபோல வயதாக, ஆக ஃபேஷியலை முறையாகச் செய்யும்போது முகம் இளமையாகவும் வறட்சியின்றியும் இருக்கும்.

சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து உபயோகிக்கத் தொடங்கலாம் என்பதைவிடவும் அவை யாருக்குத் தேவை என்பதுதான் முக்கியம். சருமத்தை தினமும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங் செய்து பார்த்துக்கொள்கிறவர்கள் என்றால் ஆன்டி ஏஜிங் க்ரீம் பயன்படுத்துவதை தாமதமாகவே தொடங்கலாம். இவர்களுக்கு எப்போதும் சருமம் ஈரப்பததத்துடன் இருக்கும்.

சருமத்துக்கு எந்தப் பராமரிப்பையும் கொடுக்காதவர்களுக்கு அது வறண்டு, முதுமையின் அடையாளங்கள் சீக்கிரமே வரத் தொடங்கும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் 30 ப்ளஸ் வயதில்தான் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வேகம் குறையத் தொடங்கி, ஹார்மோன் மாற்றங்களும் ஆரம்பிக்கும் என்பதால் அந்த வயதில்தான் சருமத்தில் முதுமைக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com