வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு, கனிமொழி நோட்டீஸ்…
திமுக எம்.பி கனிமொழி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சொத்துப் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனியார் டிவியில் ரூ.800 கோடிக்குச் சொத்து எனக் கூறப்பட்ட புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவதூறு பரப்பும் வீடியோவை 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்..
செயற்கை இழை, விஸ்கோஸ் இழைகளுக்குக் கட்டாயச் சான்றிதழ் நடைமுறையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை இழை பஞ்சுகளுக்குத் தரக்கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளிகள் அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழு அமைப்பு – பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கப் பள்ளிகள் அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவைப் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், மேலாண்மைக் குழுத் தலைவர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கு மே 5-ம் தேதி வரை பயிற்சி அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மறைவு – டி. ராஜேந்தர் இரங்கல்
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், திரைப்பட நடிகர் அஜித் குமார் வைத்து எண்ணற்ற திரைப்படங்களையும், மகன் சிலம்பரசனை வைத்து காளை, வாலு போன்ற படங்களையும் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதிற்கு அதிர்ச்சி அளித்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவரின் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் மேலும் ஒரு நோட்டீஸ்..
விசாரணை கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 4 வாரத்தில் பதிலளிக்கக்கூறி இருந்தது. இந்த நிலையில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்றவர் கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து, மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தியாவில் 7,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 51,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,669 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 7,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 51,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,669 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை..!
ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருட்கள் வாங்காமல், வாங்கியது போல் குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக – மதிமுக இணைப்பா? துரை வைகோ பதில்
திமுகவுடன் மதிமுக இணைப்பு தொடர்பாக மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ நியூஸ்18 க்கு அளித்த பேட்டியில்,
திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியதாகவும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
காவல்நிலையம் முன்பு தீக்குளித்த சிறைகாவலர் மரணம்
சொத்து பிரச்னை தொடர்பான புகாரை வாங்க மறுத்ததால் திருச்சி லால்குடி காவல்நிலையம் முன்பு சிறைக்காவலர் ராஜா தீக்குளித்தார். அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பொற்செழியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவலர் தீக்குளிப்பு – எஸ்.ஐ. சஸ்பெண்ட்
திருச்சி லால்குடி காவல்நிலையம் முன்பு சிறைக்காவலர் ராஜா தீக்குளித்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பொற்செழியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புகாரை வாங்க மறுத்ததால் காவல் நிலையம் முன்பு சிறைக்காவலர் ராஜா தீக்குளித்தார். அதனைத்தொடர்ந்து, எஸ்.பி. பரிந்துரையின்பேரில் டிஐஜி பணியிடை நீக்கம் செய்தார்.
திமுகவுடன் மதிமுக இணைப்பு? – அவைத்தலைவர் கடிதத்தால் பரபரப்பு
மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைக்க அவைத்தலைவர் துரைசாமி கடிதம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என மதிமுக அவைத்தலைவரான துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியின் கடிதம், மதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிகளவில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கோரி கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்
பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பு காரணமாக நள்ளிரவு காலமானார்.
அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு படங்களையும், விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்புவின் காளை, வாலு படங்களையும் தயாரித்தவர். மேலும் இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி : இந்தோனிஷியாவில் சோகம்
இந்தோனோஷியாவில் புளாவ் ப்ருங் என்ற இடத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 58 பேரை இந்தோனிஷியா கடலோர காவல்படை மீட்டது.
பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதியளித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்ற மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், (NEXT) ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் 4 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களி மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சூடானில் இருந்து சென்னை வந்தடைந்த 9 தமிழர்கள் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு
சூடானில் இருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த மேலும் 9 தமிழர்களுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு அளித்தார்
சூடானில் இருந்து இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதல்
நேற்று (28-ம் தேதி) நடைபெற்ற 38வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்த லக்னோ அணி, பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் டெல்லி – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.