ipl 2022 rcb won the match against lucknow | ராஜத் படிதார் சூறாவளி ஆட்டம்

Share

ஐ.பி.எல் 2022 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கோலியும் டூப்ளிஸிஸ் களமிறங்கினர். டூப்ளிஸிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ராஜத் படிதர் களமிறங்கினர். அவர் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். மறுபுறம் நிதானமாக ஆடிய கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் படிதர் மட்டும் அதிரடியாக ஆடினார். அதனையடுத்து, களமிறங்கிய லாம்ரோர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 13 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மீதமுள்ள 7 ஓவர்களில் படிதர் சூறாவளி ஆட்டம் ஆடினார். அவருக்கு தினேஷ் கார்த்திக்கும் சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஏழு ஓவரில் 92 ரன்களைக் குவித்தனர். அதன்மூலம் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களைக் குவித்தது பெங்களூரு அணி. அதனையடுத்து, 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு லக்னோ அணி களமிறங்கியது. தொடங்கத்திலேயே 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிகாக் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மனன் வோஹ்ரா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 41 ரன்களுக்கு லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராகுல், தீபக் ஹூடா இணை ரன்களைக் குவித்தது. சிறப்பாக ஆடிய ஹூடா 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 173 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 21 பந்துகளில் 35 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலைஇருந்தது.

கே.எல்.ராகுலும், இவின் லீவிஸ் களத்தில் இருந்தனர். லக்னோ வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஆட்டம் பெங்களூரு கைக்குள் சென்றது. 12 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 19-வது ஓவரை வீசிய ஹசல்வுட் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இறுதி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் லக்னோ அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் ஐ.பி.எல்லிருந்து லக்னோ வெளியேறியுள்ளது. குவாலிபயர் சுற்றில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி நாளை மோதவுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com