தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ போட்டி?: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Share

சென்னை: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று அளித்த  பேட்டி: அதிமுக, பாஜக கூட்டணி ரொம்ப வலுவாக உள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். எங்களுடைய மாநில தலைவரும் சொல்லியிருக்கிறார். நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். எங்களுடைய கூட்டணி கட்சி தலைவரான அதிமுக தலைவர்களும் இதை சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய கூட்டணியானது மிகவும் வலிமையான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணியானது தொடர்ந்து இருக்கும்.

எங்களுடைய நிர்வாகிகள் கூட்டங்களில் சில விஷயங்களை பேசுவது வழக்கம். அண்ணாமலையின் கருத்து என்னவென்றால் நம்முடைய கட்சி இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர் கூறியதை நான் சர்ச்சைக்குரியதாக கருதவில்லை. அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை. கட்சியானது ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எங்களுடைய ஜனா கிருஷ்ண மூர்த்தி காலம் தொடங்கி லட்சுமணன், இல.கணேசன், பொன்ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நான், இப்போதைய தலைவர் அண்ணாமலை வரை கட்சியின் பங்களிப்பு என்பது மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நிர்மலா சீதாராமனுடன், எஸ்.பி.வேலுமணி சந்தித்தது இயல்பானது. தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதிகளை அடையாளம் கண்டு வியூகத்துடன் தேர்தல் பணியாற்ற உள்ளோம்.

ஒன்றிய அமைச்சருடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: இந்த நிலையில் தனியார்  பள்ளி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். அவர் டெல்லி செல்வதற்காக விமான   நிலையத்திற்கு இன்று வந்தார். அங்கு அவரை அதிமுக முன்னாள்  அமைச்சர் எஸ்.பி.  வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக  பேசியதாக கூறப்படுகிறது. எடப்பாடியின் நெருங்கிய ஆதரவாளரான எஸ்.பி.வேலுமணி,  ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம்  வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஒன்றிய அமைச்சரை பாஜக  தலைவர் அண்ணாமலை,  வானதி சீனிவாசன் எம்எல்ஏவும் சந்தித்து பேசினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com