அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Share

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. இது நீண்ட நெடிய சட்டப் போராட்டம். இதுவரை 2,3 ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது.

பண பலம், ஆட்சி அதிகாரம் கையில் இருந்த செல்வாக்கால் அவர் கட்சியை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். அதிமுக எடப்பாடி பழனிசாமியிடம் சிக்கித் தவிக்கிறது. இரட்டை இலையும், அதிமுகவும் இபிஎஸ் இடம் இருப்பதால் பலவீனமாகி கொண்டு இருக்கிறது. துரோகத்தின் மூலம் பதவியை பிடித்துள்ள இபிஎஸ் தரப்பினர் அதற்கான பதிலை எதிர்காலத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம், அவர்கள் நினைத்தால்தான், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மீண்டும் இணைய முடியும் இவ்வாறு கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com