வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஸ்ஸ்ப்பாஆஆ என்ன வெயிலு. இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பாட்டில் ஐஸ் தண்ணிர் குடிச்சா எப்படி இருக்கும். , அந்த அழகான, உயரமான குளிர்ந்த நீர் பானம் மிகவும் கவர்ச்சியா இருக்கு. அதை இப்போ குடிச்சா எப்படி இருக்கும்.
அப்படியே தண்ணீர் உள்ள இறங்கி வயித்துக்குள்ள விழுறது கண்ணாடி மாதிரி நமக்கு தெரியுமே.
இப்படி எத்தனைப் பேர் வெளியில் இருந்து அதுவும் முக்கியமா வெயிலில் போய் வந்ததும் குளிர் சாதனப் பெட்டியை திறந்து தண்ணீர் குடிக்கிறதையும், இல்லை கரும்புச் சாறு, பழச்சாறுனு எது குடிச்சாலும் அதில் பனிக்கட்டி அதிகமா போட்டு குடிக்கிறதையும் பழக்கமா வச்சு இருக்கீங்க.
ஆமா, குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டுகிறது சரி, ஆனால் அது உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது, என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
குளிர்ந்த நீரில் எதாவது நன்மை இருக்கு?
இதோ இந்த பதிவு உங்களுக்குத்தான்.
உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது சுடுநீரில் கழுவினால், அது உங்கள் துளைகளைத் திறந்து உங்கள் சருமத்தை தளர்த்தும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். மறுபுறம், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவுதல் துளைகளை மூடி, சருமத்தை இறுக்கமாக்குகிறது. இப்போது இதை அப்படியே உங்கள் செரிமான மண்டலத்தில் இந்த இறுக்கத்தை கற்பனை செய்து பாருங்கள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமா இருக்கு, இல்லையா?