சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

Share

மதுரை  : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட  வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், உயர்நீதிமன்ற பொறுப்பு  தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.  மேலும், சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்களுக்கு சேவையாற்றுவது எனது முன்னுரிமை என உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்கிறீர்கள். பல வரலாற்று மிக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளீர்கள். பாராட்டுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகியுள்ளது மிகுந்த சிறப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை மதுரையில் அமைந்துள்ளது என்றால், அது கலைஞர் கருணாநிதியின் முயற்சி. இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அந்த கட்டிடம் மிகவும் கம்பீரமாக உள்ளது. நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக சிறப்பாக செயல்படும் அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.106 கோடி 70 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. நீதிமன்ற கட்டிட பணிகளுக்கு 44 புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.315 கோடி செலவில் சென்னை ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நான்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. வழக்கறிஞர் நலநிதி 8 கோடி நல நிதி வழங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமூக நீதி கடைபிடிக்க இதுபோன்று நீதித்துறையின் அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மூன்று வேண்டுகோள், நீதித்துறை தன்னிச்சையாக சட்ட நீதியும் சமூக நீதியும் இணைந்து செயல்பட வேண்டும்.சென்னை மும்பை கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றி தர வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com