தித்திப்பான ரசமலாய்… எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்…!

Share

ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ரசகுல்லா போன்றே ரசமலாய் பாலில் இருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து பின்னர் செய்யப்படுகிறது. இதன் சுவை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

தேவையான பொருட்கள்:

பால் – 3 லிட்டர்

சர்க்கரை – 3 கப்

தண்ணீர் – 4 கப்

குங்குமப் பூ – சிறிது

ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

பாதாம், முந்திரி, பிஸ்தா – 3 டேபிஸ் ஸ்பூன்

செய்முறை :

1.பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும்.

2.அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

3.மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும்படி வைக்க வேண்டும்.

4.தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசைய வேண்டும்.

5. அதன் பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ள வேண்டும். அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

6. கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.

7.இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும். அத்துடன் சிறிதளவு குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ச்சிக்காக ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம். இப்போது தித்திப்பான ரசமலாய் ரெடி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com