’’ “SARS-CoV-2 வைரஸ், இரைப்பைக் குழாயையும் பாதிக்கும் என்பது நாம் அறிந்தது. மேலும் கோவிட்-19, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்க்கு வழிவகுக்கும் சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜியோவானி மராஸ்கோ தெரிவித்துள்ளார்.

இத்தாலி, பங்களாதேஷ், சைப்ரஸ், எகிப்து, இஸ்ரேல், இந்தியா, மாசிடோனியா, மலேசியா, ருமேனியா, ரஷ்ய கூட்டமைப்பு, செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் துருக்கி ஆகிய 14 நாடுகளில் உள்ள 36 இடங்களில், கோவிட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2,183 பேரை, தொடர்ந்து 12 மாதங்களுக்கு ஆய்விற்காக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். மேலும் கோவிட் 19 பாதிக்கப்படாதவர்களோடு இவர்களை ஒப்பிட்டு பார்த்து, இந்த ஆய்வினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றனர்.